×

8ம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய்வழி, திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

சென்னை: 8ம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய்வழி, திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2024-2025-ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2025 பிப்ரவரி மாதம் 22ம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 22.022025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 31.12.2024 முதல் 24.01.2025 வரை இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் Online கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து, தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.01.2025. காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. மேலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 8ம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய்வழி, திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சத்துணவு அமைப்பாளர்களுக்கு கூடுதல்...