குலசேகரம்: சென்னையில் சாலையோரம் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அடங்கிய சுவரொட்டி மீது மூதாட்டி ஒருவர் அவதூறு ஏற்படுத்துவது போல் சித்தரித்து புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சென்னை போலீசார், அந்த வீடியோவை எடுத்தது யார் என விசாரித்தனர்.
அதில் வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்தது சென்னையில் உள்ள கார் நிறுவனத்தில் பணிபுரியும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பிரதீஷ் (24) என்பது தெரியவந்தது. அவர் விடுமுறையில் குலசேகரம் அருகே உள்ள கிராமத்துக்கு சென்றது தெரியவந்தது. சென்னை போலீசார் குமரி மாவட்டம் அஞ்சுகண்டரை கிராமத்துக்கு வந்து அவதூறு பரப்புவதற்காக வீடியோ, புகைப்படம் எடுத்த பிரதீசை கைது செய்து் சென்னைக்கு அழைத்து சென்றனர்.
The post சமூகவலைதளத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய தனியார் நிறுவன ஊழியர் கைது appeared first on Dinakaran.