×

கூடலூர் அருகே வனப்பகுதியில் ரப்பர் கழிவுகளைக் கொட்டிய கேரள வாகனத்திற்கு அபராதம்: மீண்டும் வண்டியில் ஏற்றி திருப்பி அனுப்பினர்

கூடலூர்: கூடலூர் அருகே வனப்பகுதியில் ரப்பர் கழிவுகளை கொட்டிய கேரள வாகனத்திற்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சிகள் தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ளன. இதனால் இரு மாநில எல்லைகளுக்குள் வரும் வாகனங்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இதனிடையே கடந்த சில நாட்களாக கேரள மாநில மருத்துவ, இறைச்சிக் கழிவுகளை தமிழக எல்லைப் பகுதிகளில் கொட்டி வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு கழிவுகளை கொட்டும் வாகனங்களை, சம்பந்தப்பட்ட நகராட்சி துறையினர் மற்றும் வனத்துறையினர் பறிமுதல் செய்வதோடு அபதாரமும் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், கூடலூர் பிரிவு சுரங்கனார் காப்புகாட்டு வனப் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே ரப்பர், பிளாஸ்டிக் கழிவுகளை கேரள வாகனம் ஒன்று நேற்று கொட்டுவதற்கு முயற்சித்தது. தகவலறிந்த கம்பம் மேற்கு வனச்சரகர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் வனத்துறையினர் வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். மேலும் வாகனத்திற்கு அபராதம் விதித்ததோடு, கழிவுகளை இவ்வாறு கொட்டுவது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரித்தனர். கழிவுகளை மீண்டும் வண்டியில் ஏற்றி கேரளாவிற்கே திருப்பி அனுப்பினர்.

The post கூடலூர் அருகே வனப்பகுதியில் ரப்பர் கழிவுகளைக் கொட்டிய கேரள வாகனத்திற்கு அபராதம்: மீண்டும் வண்டியில் ஏற்றி திருப்பி அனுப்பினர் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Gudalur ,forest ,Bodi ,Kambam ,Theni ,Tamil Nadu-Kerala border ,Dinakaran ,
× RELATED கேரள வனத்துறை மீண்டும் நெருக்கடி...