×

இன்ஸ்டா. மாணவியிடம் பாலியல் சீண்டல்: போக்சோவில் வாலிபர் கைது


செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (19). இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசினர். நேற்று விமல்ராஜ், மாணவியை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார். அவர் தனியாக இருப்பதை தெரிந்து, திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.

அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அந்த வாலிபரை மடக்கி பிடித்து பிரம்மதேசம் போலீசில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு விமல்ராஜை கைது செய்தனர்.

The post இன்ஸ்டா. மாணவியிடம் பாலியல் சீண்டல்: போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Cheyyar ,Vempakkam ,Tiruvannamalai district ,Vimalraj ,Kudalur village ,Uttampalayam taluka, Theni district ,Dinakaran ,
× RELATED சிறுமியை காதலித்து திருமணம் செய்த...