×

ரயில்வே நிலைய நுழைவு வாயில் அமைக்கும் பணி தீவிரம்

 

திருப்பூர், டிச.27: திருப்பூர் ரயில் நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. நடைமேடை ஒன்றின் முன் பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டு அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக கடந்த சில மாதங்களாக முன்பகுதி அடைக்கப்பட்டு மாற்றுப்பாதையில் பயணிகள் சென்று டிக்கெட் எடுத்து வந்தனர். தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் அந்த பாதை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கினர்.

இந்நிலையில் திருப்பூர் குமரன் நினைவகம் அருகே உள்ள ரயில்வே நிலைய நுழைவு வாயிலின் வளைவு அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நுழைவு வாயில் பொதுமக்கள் செல்லாத வகையில் அடைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் குமரன் நினைவகம் அருகே உள்ள நுழைவு வாயிலின் வளைவுகள் அமைக்கும் பணி மற்றும் இருசக்கர வாகன நிறுத்தும் இடம் தயார் செய்யப்படும் எனவும், அதன் பிறகு பயணிகள் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள் என ரயில்வே நிலைய அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் மாற்றுப்பாதையில் பயணிகள் சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரயில்வே நிலைய நுழைவு வாயில் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tiruppur railway station ,Dinakaran ,
× RELATED காவலர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்திய பெண்: வீடியோ வைரல்