திருப்பூர், ஜன.6: பொங்கல் பண்டிகை வருகின்ற 14ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக அரசு விடுமுறைகளும் அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்கான பொருட்களை வாங்க விடுமுறை தினமான நேற்று முதலே ஆர்வம் காட்டினர்.
திருப்பூர் புதுமார்க்கெட் வீதி, ஜவுளிக்கடை வீதி, அரிசிக்கடை வீதி, காமராஜ் சாலை, மாநகராட்சி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் நேற்று அதிகளவு காணப்பட்டது. புத்தாடைகள், நகைகள், பேன்சி பொருட்கள் ஆகியவற்றை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
மேலும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான மளிகைப் பொருட்களையும் நேற்று வாங்கி சென்றனர். ஏராளமான பொதுமக்கள் பொங்கல் பண்டிகையின் தொடர் விடுமுறையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட திட்டமிட்டிருப்பதால் நேற்று தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதன் காரணமாக வழக்கமான விடுமுறை நாட்களை விட நேற்றைய தினம் திருப்பூரின் முக்கிய கடைவீதி பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்க பொதுமக்கள் ஆர்வம் appeared first on Dinakaran.