×

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

 

திருப்பூர், ஜன.6: திருப்பூர் 15.வேலம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவல் அடிப்படையில் 15.வேலம்பாளையம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அனுப்பர்பாளையம் அடுத்த கோகுலம் காலனி பகுதியில் உள்ள காலி இடத்தில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள் புதுகாலனி பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்கிற கப்சா கார்த்தி (25), கோகுலம் காலணியை சேர்ந்த ஈஸ்வரபாண்டி (20) என்பதும், அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 15.வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, ஈஸ்வரபாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1300 கிராம் கஞ்சா, ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதேபோல் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வெங்கமேடு மாதேஸ்வரன் கோவில் பின்புறம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 18 வயதுடைய 2 சிறுவர்களை கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Velampalayam police station ,Velampalayam police ,Gokulam Colony ,Anuparpalayam… ,Dinakaran ,
× RELATED காவலர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்திய பெண்: வீடியோ வைரல்