×

ஆளுநரை கண்டித்து வடக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், ஜன.8: ஆளுநரை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களை செய்யும் ஆளுநரை காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்ற பல செயல்களை செய்யும் அதிமுக, பாஜ கூட்டணியை கண்டித்தும், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் குமரன் சிலை அருகே நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது கவர்னரை கண்டித்தும், அதிமுக மற்றும் பாஜ கட்சிகளை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதில் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் உமா மகேஸ்வரி, மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் ராமதாஸ், மின்னல் நாகராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் மணி, கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், பிரேமலதா கோட்டா பாலு மற்றும் வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் திலகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post ஆளுநரை கண்டித்து வடக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Northern District ,Dimuka ,Tiruppur ,Tamil Nadu ,Union ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூரில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை