×

சேலம் எருமாபாளையத்தில் கல்லூரி மாணவி மாயம்

சேலம், டிச.27: சேலம் எருமாபாளையம் ஆலமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் மகேஸ்வரி (20). பெரியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 24ம்தேதி அதிகாலை, தனது உறவினர் வீட்டிற்கு குளிப்பதற்காக சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால், மாணவி மகேஸ்வரியை உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் பெற்றோர் தேடினர். ஆனால் அவரை காணவில்லை. இதுபற்றி கிச்சிப்பாளையம் போலீசில், பெற்றோர் புகார் கொடுத்தனர். எஸ்ஐ ராஜா விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து மாயமான மாணவி மகேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post சேலம் எருமாபாளையத்தில் கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Salem Erumapalayam ,Salem ,Ravichandran ,Alamarathukadu ,Erumapalayam, Salem ,Maheshwari ,Periyar University ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்