×

பெலகாவியில் 2 நாள் கூட்டம்; காங். காரிய கமிட்டி நாளை கூடுகிறது

புதுடெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டியின் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் பெலகாவியில் நாளை தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சியில் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த காரிய கமிட்டி கூட்டம், கர்நாடகா மாநிலம் பெலகாவியில் நாளை தொடங்குகிறது. 2 நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில் அடுத்த ஆண்டுக்கான கட்சியின் செயல் திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதுதவிர 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் மற்றும் ஊடக, விளம்பர துறை தலைவர் பவன் கேரா ஆகியோர் டெல்லியில் நேற்று கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 1924ம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. அது காரிய கமிட்டியின் 34வது கூட்டம். அக்கூட்டம் மட்டுமே மகாத்மா காந்தி தலைமையில் நடந்த ஒரே கூட்டம். அதன் 100ம் ஆண்டை நினைவு கூரும் வகையில் இம்முறை பெலகாவியில் காரிய கமிட்டி கூடுகிறது. இதில் 2025ம் ஆண்டுக்கான கட்சியின் செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்படும். 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இக்கூட்டத்திற்கு ‘புதிய சத்தியாகிரக கூட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், அம்பேத்கர் குறித்து அமித்ஷா அவதூறாக பேசிய விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும். அமித்ஷா பதவி நீக்கப்பட வேண்டும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென காரிய கமிட்டி வலியுறுத்தும். வரும் 27ம் தேதி ‘ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ பேரணி நடைபெறும். இந்த 2 நாள் கூட்டத்தில் கட்சியின் 200 தலைவர்கள் பங்கேற்பார்கள். பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள், எம்பிக்கள், முக்கிய நிர்வாகிகள் உட்பட லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பெலகாவியில் 2 நாள் கூட்டம்; காங். காரிய கமிட்டி நாளை கூடுகிறது appeared first on Dinakaran.

Tags : Belagavi ,Congress Working Committee ,New Delhi ,Working Committee ,Congress party ,Belagavi, Karnataka ,Dinakaran ,
× RELATED கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே...