×

போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி போல பேசி பெண்ணிடம் ரூ.7.70 லட்சம் மோசடி

 

கோவை, டிச. 25: கோவை சரவணம்பட்டி காளப்பட்டி ரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் பிரேமா ஆனந்தி (39). இவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தான் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஆதார் முகவரியை பயன்படுத்தி போதை பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் உங்களை அழைப்பார்கள் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

சிறிது நேரத்தில் அவரை அழைத்த ஒருவர், தான் மும்பை போலீஸ் அதிகாரி எனவும், நீங்கள் போதைப்பொருள் அனுப்பியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க உங்களது வங்கி கணக்கில் இருக்கும் முழு பணத்தையும் நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள். கணக்கை சரிபார்த்த பின்னர் பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை உண்மையென நம்பிய பிரேமாஆனந்தி 13 கட்டங்களாக அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.7.70 லட்சம் அனுப்பினார்.  ஆனால், அதன் பின்னர் அவருக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை. விசாரித்தபோது, மோசடி நபர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து பிரேமாஆனந்தி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி போல பேசி பெண்ணிடம் ரூ.7.70 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Prema Anandhi ,Lakshmi Nagar, Kalapatti Road, Saravanampatti, Coimbatore ,
× RELATED ஸ்கூட்டருக்கு தீவைத்து எரித்து...