×

ஸ்கூட்டருக்கு தீவைத்து எரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர் மீது தாக்குதல்

 

கோவை, ஜன. 8: ஸ்கூட்டருக்கு தீவைத்து எரித்து மாநகராட்சி தூய்மை பணியாளரை தாக்கிய கள்ளக்காதலியின் மகன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் சந்திரன் (44). மாநகராட்சி தூய்மை பணியாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த சந்திரனின் மனைவி அவரை கண்டித்து வந்தார்.

சம்பவத்தன்று சந்திரன் ஆவராம்பாளையம் பகுதியில் அந்த பெண்ணை சந்தித்து பேசி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சந்திரனின் மனைவி, அவர்கள் இருவரும் பேசி கொண்டு இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தார். பின்னர் அந்த பெண்ணை தாக்கினார். இது குறித்து அந்த பெண்ணின் 20 வயது மகனுக்கு தெரியவந்தது. உடனே அவர் சந்திரனின் வீட்டிற்கு சென்று சந்திரனை சரமாரியாக தாக்கி, அவரது ஸ்கூட்டருக்கு தீ வைத்து எரித்தார். சம்பவம் குறித்து சந்திரன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கள்ளக்காதலியின் மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஸ்கூட்டருக்கு தீவைத்து எரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Chandran ,Vilankurichi Road, Peelamedu, Coimbatore ,
× RELATED கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம்