×

புதுச்சேரியில் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்: காங்கிரஸ் ஆதரிக்கும்; வைத்திலிங்கம் எம்பி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்பியுமான வைத்திலிங்கம் நேற்று அளித்த பேட்டி: பேரிடர் மீட்பு நிவாரணம் குறித்து விவாதம் செய்ய சட்டசபையை கூட்ட வேண்டும். சபாநாயகர் செல்வத்தின் மீது சுயேச்சை உறுப்பினர்கள் கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு விவாதம் நடத்த வேண்டும்.

இதற்கென்று தனியாக சட்டமன்ற கூட்டம் நடத்த வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். சபாநாயகர் செல்வம் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதும், அனைத்திலும் மூக்கை நுழைப்பதும் தவறுதான். அவர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் பிரச்னைகளை எடுத்துச் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்

The post புதுச்சேரியில் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்: காங்கிரஸ் ஆதரிக்கும்; வைத்திலிங்கம் எம்பி தகவல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Congress ,Vaithilingam ,Puducherry Congress Party ,Speaker ,Selvam ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்குப் பின்...