×

3வது ஒருநாள் ஆட்டத்திலும் அயூப் அதிரடியால் பாக். வெற்றி: சொந்த மண்ணில் தெ.ஆ ஒயிட்வாஷ்

ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா-பாகிஸ்தான் இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் ஆட்டம் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற தெ.ஆ பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரின் 2வது பந்திலேயே பாக் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லாவை வெளியேற்றி ரபாடா அதிர்ச்சி அளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சயம் அயூப் 101, பாபர் 52, கேப்டன் ரிஸ்வான் 53, சல்மான் 48ரன் விளாசி ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து 47ஓவரில் மீண்டும் மழை எட்டிப் பார்க்கவே ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மீண்டும் மழை நின்று ஆட்டம் தொடங்கியபோது டக்வொர்த் லீவிஸ் முறையில் ஓவர்களின் எண்ணிக்கை 47ஆக குறைக்கப்பட்டது. இலக்கு 308ரன்னாக நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது பாகிஸ்தான் 47வது ஓவரில் 9விக்கெட் இழப்புக்கு 308ரன் எடுத்திருந்தது. தெ.ஆ வீரர்கள் காகிசோ ரபாடா 3, மார்கோ யென்சன், ஜான் ஃபேர்டியன் தலா 2 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து தெ.ஆ 47ஓவரில் 308ரன் எடுத்தால் ஆறுதல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. எனினும் அந்த அணி 42ஓவரிலேயே 271ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

எனவே பாக் 36ரன்னில் ஹாட்ரிக் வெற்றிப் பெற்றது. தெ.ஆ அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 81, அறிமுக வீரர் கார்பின் போஷ் ஆட்டமிழக்காமல் 40, வாண்டர் டுசன் 35ரன் எடுத்தனர். பாக் வீரர்களில் அறிமுக வீரர் சுஃபியன் முகீம் 4, அப்ரிடி, நகீம் ஷா தலா தலா 2விக்கெட் எடுத்து வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பாக் முழுமையாக கைப்பற்றி உள்ளது. கூடவே சொந்த மண்ணின் தெ.ஆவை ஒயிட் வாஷ் செய்து வரலாறு படைத்துள்ளது. இந்த ஆட்டம் மற்றும் தொடரின் சிறந்த வீரராக அயூப் தேர்வு செய்யப்பட்டார். இந்த 2 அணிகளுக்கு இடையே முதலில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை தெ.ஆ 2-0 என்ற கணக்கில் கைபற்றியது. கூடவே இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிச.26ம் தேதி தொடங்குகிறது.

The post 3வது ஒருநாள் ஆட்டத்திலும் அயூப் அதிரடியால் பாக். வெற்றி: சொந்த மண்ணில் தெ.ஆ ஒயிட்வாஷ் appeared first on Dinakaran.

Tags : Ayub ,Pakistan ,South Africa ,Johannesburg ,Dinakaran ,
× RELATED உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்: புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் சரிவு