×

பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

சென்னை : பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி உள்ளது. ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கடிதம் அனுப்பி உள்ளார். பொங்கல் பண்டிகை என்பது தமிழ்நாடு விவசாயிகளின் உணவார்ந்த திருநாள் என்றும் பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஜன.14 முதல் 16-ம் தேதி வரை அரசு விடுமுறை அறிவித்துள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் appeared first on Dinakaran.

Tags : UGC-NET ,Pongal festival ,Tamil Nadu government ,Union Government ,Chennai ,Pongal ,Higher Education ,Minister ,Kovi ,Chezhiyan ,Union Education Minister ,Dharmendra Pradhan.… ,
× RELATED பொங்கல் பண்டிகை நாட்களில் யுஜிசி-நெட்...