×

பொங்கல் பண்டிகை நாட்களில் யுஜிசி-நெட் தேர்வை நடத்துவதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

சென்னை: பொங்கல் பண்டிகை நாட்களில் யுஜிசி-நெட் தேர்வை நடத்துவதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாளில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த மாதம்தான் பொங்கல் அன்று அறிவிக்கப்பட்டிருந்த சி.ஏ. தேர்வு தேதியை போராடி மாற்றினோம். தற்போது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது.

The post பொங்கல் பண்டிகை நாட்களில் யுஜிசி-நெட் தேர்வை நடத்துவதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Su.Venkatesan ,UGC-NET ,Pongal festival ,Chennai ,Union Government ,Pongal ,Dinakaran ,
× RELATED பொங்கல் நாளில் யுஜிசி – நெட் தேர்வு;...