சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன் என்ற நபரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; அண்ணா பல்கலை. விவகாரத்தில் தைரியமாக புகார் கூறிய மாணவிக்கு பாராட்டுகள்.
பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும்.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரும் நோக்கில் வேகமாக நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் தொடர்பாக புகார் பெற்றவுடன் சம்பந்தப்பட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கல்வித்துறை, சமூக நலத்துறை, காவல் துறை இணைந்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
பாலியல் புகார் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும் நடைமுறை உள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக அலட்சியமாக செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் எஃப்.ஐ.ஆர்.கள் குறைக்கப்பட்டன; குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. எடப்பாடி பழனிசாமியின் அனைத்து கேள்விகளுக்கும் காவல் ஆணையர் உட்பட அனைவரும் ஏற்கெனவே பதில் அளித்துவிட்டனர். பெண்கள் மற்றும் | குழந்தைகளுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்று கூறினார்.
The post பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி appeared first on Dinakaran.