×

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 29வது பிளாக்கில் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் படுகாயம்!

சென்னை: பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 29வது பிளாக்கில் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் 50 ஆண்டுகள் பழமையான குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கட்டிடங்கள் கட்டப்பட்டு நீண்ட காலம் ஆவதால் அவ்வபோது இடிந்து விழுகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இதே குடிசை மாற்று வாரியத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் சையத் குலாம் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த பகுதியில் மீண்டும் ஒரு பால்கனி இருந்து விழுந்துள்ளது. மூன்றாவது மாடியின் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததில், மோகன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவ நடந்த இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதமடைந்த வீடுகளில் இருந்த குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

The post குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 29வது பிளாக்கில் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் படுகாயம்! appeared first on Dinakaran.

Tags : Slum Replacement Board ,Chennai ,Pattinapakkam Srinivasapuram ,Pattinapakkam Srinivasapuram, Chennai ,block ,Dinakaran ,
× RELATED சீனிவாசபுரம் கட்டிட விபத்தில்...