×

கோவையில் 11.95 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: கோவையில் சுமார் ரூ.217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 33 ஆண்டு சட்டப் போராட்டத்துகுப் பிறகு வீட்டு வசதி வாரியம் நிலத்தை கையகப்படுத்தியது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன், ரவீந்திரன் ஆகியோர் 2008-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 1988ல் வீட்டு வசதி வாரிய திட்டத்துக்காக சவுரிபாளையம் கிராமத்தில் 11.95 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனவும் நிலத்தை கையப்படுத்தியது செல்லாது எனவும் அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

The post கோவையில் 11.95 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Goa ,Supreme Court ,Delhi ,Housing Authority ,Housing Board ,Goa Goes ,Dinakaran ,
× RELATED வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக...