×

சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு: டிச.25,26 ஜன.12, 14ம் தேதிகளிலும் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி

கேரளா: டிசம்பர்.25,26 ஜனவரி.12, 14ம் தேதிகளிலும் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை டிசம்பர், ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம் . மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். பூஜை காலத்தில் தினமும் 80,000 பேர் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

இணையம் மூலம் முன்பதிவு செய்யும் போது எந்த வழியாக யாத்திரையை மேற்கொள்வது என்பதை தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். இந்த நிலையில், இந்தாண்டு மண்டல, மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், சபரிமலையில் டிசம்பர் .25, 26-ம் தேதிகளில் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவுக்கு அனுமதி வழங்கப்படும். ஜனவரி. 12, 14ம் தேதிகளிலும் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் மட்டும் ஸ்பாட் புக்கிங் வசதி கிடையாது என்றும் தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது.

The post சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு: டிச.25,26 ஜன.12, 14ம் தேதிகளிலும் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Kerala ,Sabarimala Ayyappa ,Mandala ,Makaravilakku Pooja ,
× RELATED கோவையில் 11.95 ஏக்கர் நிலத்தை...