×

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்து: 4 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் இருந்து 13 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று வேனில் சென்றனர். ஊருக்கு திரும்பும் போது புல்லா சமுத்திரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பிரேம் குமார் (30), அதர்வா (2), ரத்னம்மா (70), மனோஜ் (32) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

The post ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்து: 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : AP ,Ananthapuram ,Andhra ,Anantapura, AP ,Sri Satyasai district ,Sami ,Tirupathi ,Elomalayan ,Temple ,
× RELATED ஆந்திரா மாநிலம் அனந்தபுரம்...