×

டிச.27ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

திருப்பூர், டிச. 21: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாக அறை எண்: 240ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்களை வழங்கிடவும், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம் தங்களது கோரிக்கைகளை தொகுத்து நேரடியாக தெரிவித்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post டிச.27ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tiruppur District ,Collector ,Christhuraj ,Office ,Complex ,Redressal ,Dinakaran ,
× RELATED சிறை கைதி தப்பிய சம்பவம்: 5 பேர் சஸ்பெண்ட்