×

சிஐடியு ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், டிச.20: திருப்பூர் காங்கயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் உள்ள திருப்பூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பாக சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டம் நேற்று நடந்தது. சம்மேளனத்தின் கோவை மாவட்ட தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘போக்குவரத்து கழகத்தில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தொகையை வழங்க வேண்டும். 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேசி முடிக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஓய்வு பெற்றோருக்கு 110 மாத அகவிலைப்படி உயர்வு உடனே வழங்க வேண்டும். வாரிசு வேலை உடனே வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். வேலைக்கு ஆட்களை முறையாக நியமனம் செய்ய வேண்டும். தனியார்மய கொள்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகளை விலக்கி திருப்பூர் மண்டல பொதுச்செயலாளர் செல்லதுரை, ஈரோடு மண்டல பொதுச்செயலாளர் ஜான்சன் கென்னடி, கோவை மண்டல பொதுச்செயலாளர் வேளாங்கண்ணி ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

The post சிஐடியு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : CITU ,Tiruppur ,CITU Tamil Nadu Government Transport Employees' Federation ,Tiruppur Transport Zone Office ,CDC ,Tiruppur Kangayam Road ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பைக் டாக்ஸி முறை தடை கோரி திருவாரூரில்...