அரவக்குறிச்சி, டிச.21: அரவக்குறிச்சியின் கடைவீதியில் வணிக வளாகங்கள், சிறு சிறு கடைகள், இறைச்சி கடைகள், கேஸ் குடோன் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையில் சார்பதிவாளர் அலுவலகமும் உள்ளது. எனவே இந்த சாலையில் எப்போதும் வாகனப் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்த சாலையின் இருபுறமும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.
எனவே பொதுமக்கள் நடந்து செல்வதற்கே மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் எளிதில் வந்து செல்ல முடியாதவாறு இரண்டு புறமும் கார்களை நிறுத்தப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் அல்லது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அரவக்குறிச்சி கடைவீதியில் வாகன நெரிசல்: போக்குவரத்தை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.