புதுடெல்லி: பிரியங்கா காந்திக்கு 1984 சீக்கியர் படுகொலையை நினைவுபடுத்தும் விதத்தில் 1984 என பொறிக்கப்பட்ட கைப்பையை பாஜ பெண் எம்பி பரிசாக வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, நாடாளுமன்றத்துக்கு வரும் போது பாலஸ்தீனம் என பொறிக்கப்பட்டிருந்த கைப்பையை கொண்டு வந்திருந்தார்.
அதே போல் வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதை கண்டிக்கும் விதமான வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்த கைப்பையை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்திருந்தார். இந்த நிலையில், பாஜ பெண் எம்பி அபரஜிதா சாரங்கி நேற்று பிரியங்கா காந்திக்கு கைப்பையை பரிசாக அளித்தார். அதில் சிவப்பு எழுத்துக்களில் 1984 என எழுதப்பட்டிருந்தது. சீக்கியர் படுகொலையை நினைவூட்ட அந்த வாசகம் அச்சிடப்பட்ட கைப்பையை அவர் கொடுத்துள்ளார்.
The post பிரியங்காவுக்கு பாஜ பெண் எம்பி வழங்கிய பரிசால் சர்ச்சை appeared first on Dinakaran.