×

அரவத்தூர், மாணிக்கமங்கலம் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்

 

வலங்கைமான், டிச. 20: வலங்கைமான் அடுத்த அரவத்தூர், மாணிக்கமங்கலம் இணைப்பு சாலை யை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரவூர் ஊராட்சியில் உள்ளது அரவத்தூர் கிராமம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்வசி த்து வருகின்றனர். இங்குள்ள சாலை அரவத்தூர் -மாணிக்கமங்கலம் இணைப்பு சாலையாக உள்ளது. இந்தசாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாததால் சாலையில் கப்பிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.

சாலையில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளதால் இரு சக்கர வாகனங்களில் பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பல முறை கோரிக்கைவிடு த்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்ம ந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post அரவத்தூர், மாணிக்கமங்கலம் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Arawathur, Manikamangalam Link Road ,Valangaiman ,ARAWATHUR ,MANIKAMANGALAM LINK ROAD ,VALANKAIMAN ,Thiruvarur district ,Aravur Uradchi ,Valangaiman Uratchi Union ,
× RELATED வலங்கைமானில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்ற கோரிக்கை