×

வலங்கைமானில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்ற கோரிக்கை

 

வலங்கைமான், டிச. 18: வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட செந்தமிழ் நகர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி செந்தமிழ்நகர் குடியிருப்பு பகுதியில் செந்தமிழ்நகர் பள்ளிவாசல் எதிர்ப்புறம் பிள்ளையார் கோவில் பின்புறம் ஆகிய இடங்களில் 4அடி தண்ணீர் தேங்கி நிற்கிறது.

வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது இதிலிருந்து பாம்புகள், விஷபூச்சிகள் வெளிவருகிறது அசுத்தமான தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வலங்கைமானில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,Senthamizh Nagar ,Valangaiman Town Panchayat ,Thiruvarur district ,Senthamizh Nagar Masjid ,Pillaiyar Temple… ,
× RELATED அரவத்தூர், மாணிக்கமங்கலம் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்