- திமுக
- பெருந்துறை
- முதல் அமைச்சர்
- ஈரோடு
- தொழிற்சங்க செயலாளர்
- கே.பி.சுவாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
- ஈரோடு மாவட்டம்
ஈரோடு, டிச. 19: தமிழ்நாடு முதல்வர் வருகையையொட்டி பெருந்துறையில் இருந்து ஈரோடு வரை திமுக கொடி கம்பம் நடும் பணிகளை ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு இன்று (19ம் தேதி) வருகிறார். இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தின் எல்லையான விஜயமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக மற்றும் பெருந்துறை ஒன்றியத்தின் சார்பில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை கட்சியினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.
இதில், விஜயமங்கலம் முதல் ஈரோடு வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு பல ஆயிரம் திமுக கொடி கம்பம் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், பெருந்துறை பகுதியில் ஈரோடு சாலையில் திமுக கொடி கம்பம் நடும் பணிகளை பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
The post முதல்வர் வருகையையொட்டி பெருந்துறையில் திமுக கொடி கம்பம் நடும் பணி appeared first on Dinakaran.