ஈரோடு, டிச. 19: ஈரோடு மாவட்டம், பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை (20ம் தேதி) முதல் பாக்கு ஏலம் தொடங்க உள்ளது. விவசாயிகள் தங்களிடம் உள்ள பாக்கு பழம், காய்ந்த பாக்கு காய், சாலி பாக்கு மற்றும் ஆப்பி பாக்குகளை இந்த ஏலத்தின் மூலமாக விற்பனை செய்யலாம். ஏல விற்பனைக்கு வரும் பாக்குகளை ரகம், அளவு, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் தரம் பிரித்து கொண்டுவர வேண்டும்.
ஏலத்துக்கு பாக்குகளை கொண்டு வரும் விவசாயிகள், தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல் ஆகியவற்றையும் எடுத்து வர வேண்டும். இந்த ஏலத்துக்கு முன்பதிவு, உறுப்பினர் சேர்க்கை நடைமுறைகள் எதுவும் இல்லை. அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம். இந்த ஏலத்துக்கு எவ்வித கட்டணம், கமிஷன் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 99444 47261 எனும் எண்ணில் விற்பனைக் கூட கண்காணிப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.
The post நாளை முதல் பவானி விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம் appeared first on Dinakaran.