நன்றி குங்குமம் தோழி
‘ஆப்பிள்’ பழம் உடலை பாதுகாக்கிற, நலமளிக்கிற உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷ தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
*ஆப்பிளில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்களும், குறைந்த அளவு ேசாடியமும் உண்டு. அதனால் இதய இயக்க கோளாறுகளுக்கு ஆப்பிளுடன் தேன் கலந்து உண்பது சிறந்த பலனைத் தரும்.
*மூளைக் கோளாறை குணப்படுத்தும் பாஸ்பரஸ் ஆப்பிளில் உள்ளது. அதனால் மூளைக் கோளாறு உள்ளவர்கள் அவசியம் தினமும் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. நோயும் குணமாகும்.
*தூக்கத்தில் நடமாடும் வியாதி உள்ளவர்கள் தினமும் இரண்டு ஆப்பிள்களை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்து, பால் கலந்து கொடுத்து வந்தால் வியாதி விரைவில் குணமாகி விடும்.
*சிலர் ஆப்பிள் தோலை சீவி எறிந்து விட்டுப் பழத்தை மட்டும் உண்பர். சதைப் பகுதியை விட தோலிலும், அதனடியில் உள்ள சதுப்பிலும் அதிக அளவு வைட்டமின் ‘சி’ சத்து இருக்கிறது.
*ஆப்பிளை பச்சையாக அப்படியே சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நல்லது. வேகவைத்த ஆப்பிள் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும்.
*அனைத்து வகை தலைவலிகளுக்கும் ஆப்பிள் அருமருந்தாகும். தலைவலியால் அவதிப்படுபவர்கள் ஆப்பிளின் தோலையும், கடினப்பகுதியையும் அகற்றி விட்டு, சதைப் பகுதியுடன், சிறிதளவு உப்பு சேர்த்து, தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஒரு வாரத்தில் தலைவலி நோய் தீரும்.
*ஆப்பிள் சாப்பிடுவதால், ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு ஆப்பிள் சாப்பிடுவதால் தீமைகளும் ஏற்படும். ஆப்பிளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நார்ச்சத்து பொதுவாக செரிமானத்திற்கு மிக சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால் செரிமான பிரச்னைகள் உள்ளவர்கள் ஆப்பிளை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது.
*ஆப்பிளில் அதிகளவு சர்க்கரை இருப்பதால், ரத்த சர்க்கரை அளவு கணிசமாக அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடக்கூடாது.
*சிலருக்கு ஆப்பிள் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். ஆப்பிள் உட்கொண்டவுடன் தோலில் அரிப்பு, சொறி, வீக்கம் ஆகியவை தோன்றும். ஆப்பிள் சாப்பிட்ட பின்னர் இப்படிப்பட்ட விஷயங்கள் ஏற்பட்டால், உடனடியாக ஆப்பிள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
தொகுப்பு: எஸ்.ஜெயந்திபாய், மதுரை.
The post இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்! appeared first on Dinakaran.