×

ரூ.1792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது ஃபாக்ஸ்கான் நிறுவனம்!!

சென்னை : ரூ.1792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது ஃபாக்ஸ்கான் நிறுவனம். சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சுங்குவார்சத்திரத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஐபோன்கள் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குப் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் வருங்காலத்தில் ஐபேட்களையும் தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2025-ம் ஆண்டு பிற்பாதி முதல் இந்தப் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் ப்ரீமியம் வகை மொபைல் போன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ரூ.1792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனம். 3.55 லட்சம் சதுர அடியாக உள்ள கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2601 கோடி முதலீட்டில் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலை மூலம் 40,000 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், புதிய முதலீட்டின் மூலம் கூடுதலாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தபிறகு, கட்டுமான பணிகள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ரூ.1792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது ஃபாக்ஸ்கான் நிறுவனம்!! appeared first on Dinakaran.

Tags : Foxconn Company ,Chennai ,Foxconn ,Sunguvaritra ,Sriprahumutur, Chennai ,Apple ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!