×

துவரங்குறிச்சி பகுதியில் வீடுகளை அட்டகாசம் செய்யும் குரங்கு கூட்டம்

 

துவரங்குறிச்சி, டிச.18: துவரங்குறிச்சி பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் நீடிப்பதால் அப்புறப்படுத்த வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவில் குரங்குகள் சுற்றித்திரிகின்றனர். கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் குரங்குகள் குழந்தைகள் வைத்திருக்கும் தின்பண்டங்களை பறித்து செல்வரால் ஒருவித பயத்துடன் சாலையில் சென்று வருகின்றனர்.

மேலும் வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து வீணடிக்கின்றன. இதனால் வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவுகளை சாத்தியபடியே உள்ளனர். இதனால் வனத்துறையினர் குரங்குகளை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post துவரங்குறிச்சி பகுதியில் வீடுகளை அட்டகாசம் செய்யும் குரங்கு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dhuvarankurichi ,Ponnampatti Panchayat ,Trichy district ,Dinakaran ,
× RELATED மணப்பாறை அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட 4 மாடுகள்