கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் எண்ணற்ற தொழிற்சாலைகள் இயங்குகிறது. இங்கு குறிப்பாக இரும்பு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்க மாநிலங்களை சேர்ந்தவர் பணியாற்றி வருகின்றனர். தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு காரணமாக இதுவரை 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இது சம்பந்தமாக டிஎஸ்பி ஜெய, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் ஆகியோர் தொழிற்சாலை நிர்வாகத்தை அழைத்து ஆலோசனை நடத்தினர். ஒரு உயிர்கூட போக கூடாது எனவும், மீறினால் மனித வள மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி ஒரு தொழிற்சாலையில் வழக்கம்போல பீகாரை சேர்ந்த ராஜ்கரண் சிங் (44) செல்போன் பேசிக்கொண்டு நடந்து வந்த போது மரக் கரி லோடு இறக்க தார்பாயை எடுத்து மடிக்கும்போது லாரியில் இருந்து சுமார் 50 கிலோ எடையுள்ள மரக்கரி மூட்டை அவர் மீது விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அவரை சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று முன்தினம் மாலை ராஜ்கரண் சிங் உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் மரக்கரி மூட்டை விழுந்து வடமாநில வாலிபர் பலி appeared first on Dinakaran.