×

கடையம் அருகே சுடுகாட்டுக்கு பாலம் வசதி இல்லாததால் கால்வாய் தண்ணீரில் மூதாட்டி உடலை கொண்டு சென்ற அவலம்


கடையம்: கடையம் அருகே பாப்பான்குளத்தில் பெரிய தெரு உள்ளது. இப்பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இறந்த தங்களது உறவினர்களை அடக்கம் செய்ய வேண்டுமென்றால் துப்பாக்குடி கால்வாய் கடந்து சுடுகாடு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்கள் தொடர் பெய்த கனமழை காரணமாக கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த சூழலில் அப்பகுதியில் மூதாட்டி ஒருவர் வயது முதிர்வு காரணமாக காலமானார். இதையடுத்து வேறு வழியின்றி கால்வாய் தண்ணீரில் அவரது உடலை உறவினர்கள் மிகவும் சிரமத்துடன் கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இப்பகுதியில் சுடுகாடு செல்வதற்கு கால்வாயின் குறுக்கே பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘கடந்த 12ம் தேதி முதல் 3 நாட்கள் பெய்த தொடர் மழையால் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் கால்வாயில் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்த சூழலில் மூதாட்டி காலமான நிலையில் அவரது உடலை தண்ணீரில் சிரமப்பட்டு கொண்டு சென்றோம். கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது இறந்திருந்தால் அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று இருக்க முடியாது. இப்பிரச்னையை தீர்க்க சுடுகாட்டுக்கு செல்ல வசதியாக கால்வாய் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும்’ என்றனர்.

The post கடையம் அருகே சுடுகாட்டுக்கு பாலம் வசதி இல்லாததால் கால்வாய் தண்ணீரில் மூதாட்டி உடலை கொண்டு சென்ற அவலம் appeared first on Dinakaran.

Tags : Kadayam ,Papankulam ,Thuppakudi canal ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார்வயர் திருட்டால் 8...