×

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி இபிஎஸ் பேசியதை எதிர்த்து: ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு சாட்சி விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

சென்னை: போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை சாட்சி விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை டெல்லி போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் திமுகவுடன் ஜாபர் சாதிக்கை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட கோரி திமுக தரப்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து பொது ம க்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுத் தளத்தில் இருந்த தகவல்களின் அடிப்படையிலேயே டுவிட் செய்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பிப்ரவரி 3ம் தேதிசாட்சி விசாரணையை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

The post போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி இபிஎஸ் பேசியதை எதிர்த்து: ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு சாட்சி விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : EPS ,Dimuka ,Master Court ,Bharati ,Chennai ,Rt. General Secretary ,Edappadi Palanisamy ,Dimuga ,Chennai High Court ,EBS ,Dinakaran ,
× RELATED திமுக கலந்தாய்வு கூட்டம்