சூலூர்: எல்லா பள்ளிகளிலும் அனைத்து வசதியுடன் ஆய்வுக்கூடங்கள் அமைக்க முயற்சி நடக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். கோவையில் உள்ள கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாநிலம் தழுவிய கல்வி அலுவலர்களுக்கான 2 நாள் ஆய்வுக் கூட்டம் நேற்று துவங்கியது. இதை, தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வுக்கூடங்களை அமைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட வசதி அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சி தொடர்பாக ஒன்றிய அரசு தனியார் சர்வே நிறுவனத்துடன் இணைந்து சர்வே எடுக்கிறார்கள். அது பெரும்பாலும் தவறுகளாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த ஒரே அரசு தமிழ்நாடு அரசுதான். தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏஐ மூலம் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
The post பள்ளிகளில் அனைத்து வசதியுடன் ஆய்வுக்கூடம்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி appeared first on Dinakaran.