×

கார்த்திகை தீபம் எதிரொலி மீன் மார்க்கெட் வெறிச்சோடியது

 

திருப்பூர் , டிச.16: திருப்பூர் தென்னம்பாளையம் தினசரி சந்தைக்கு பின்புறமாக மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கடல் மற்றும் டேம் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வார நாட்களில் காலை முதல் மதியம் வரை மீன் விற்பனை நடைபெறக்கூடிய நிலையில் வார இறுதி விடுமுறை நாளான சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மீன் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் மீன்களை வாங்கி செல்கின்றனர்.  இந்நிலையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்து சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் 20 டன்னும், டேம் மீன்கள் 30 டன் வரையிலும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தது.

The post கார்த்திகை தீபம் எதிரொலி மீன் மார்க்கெட் வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Tags : Karthigai Deepam Ethiroli Fish Market ,Tiruppur ,Thennampalayam ,Tamil Nadu ,Kerala ,Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைவு