×

திண்டுக்கல் நத்தம் சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்: தடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

 

திண்டுக்கல், டிச.16: திண்டுக்கல் நத்தம் ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தைச் சீரமைக வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் நத்தம் சாலையில் தினந்தோறும் பஸ், கார், இருசக்கர வாகனம் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக குள்ளனம்பட்டி, பொன்னகரம், மற்றும் சேர்வீடு பிரிவு, நத்தம் பஸ் ஸ்டாண்ட் முன்பு போன்ற பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் இந்த சாலையில், வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இது தொடர்பாக பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.ஆகையால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் பள்ளங்களை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post திண்டுக்கல் நத்தம் சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்: தடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dindigul Natham road ,Dindigul ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் நத்தம் சாலையில்...