×

மது-புகையிலை விற்ற 3 பேர் கைது

 

ஈரோடு,டிச.16:சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை அண்ணாநகர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதன்பேரில், சத்தியமங்கலம் போலீஸ் எஸ்ஐ வாசு தலைமையிலான போலீசார் அங்கு சென்று, டாஸ்மாக் கடை மூடியிருந்த நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த அதேபகுதியை சேர்ந்த தனுஷ் (20) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி வைத்து விற்றதாக கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் திருப்பதி (45), ராஜாஜிபுரத்தில் கணேசன் (50) ஆகிய 2 பேரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

The post மது-புகையிலை விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Annanagar ,Vadakkupet, Sathyamangalam ,Sathyamangalam Police ,SI ,Vasu ,TASMAC ,Dinakaran ,
× RELATED மது விற்ற 3 பேர் கைது