×

வடகிழக்குப் பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிட்ட சென்னை மாநகராட்சி

 பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 01.10.2024 காலை 8.30 மணி முதல் 12.12.2024 காலை 8.30 மணி வரை பதிவான மழையின் அளவு – 891.35 மி.மீ.

 இன்று (12.12.2024) காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு சராசரியாக 49.56 மி.மீ.

 இன்றைய அதிகபட்ச மழையளவு வளசரவாக்கம், நெற்குன்றத்தில் 117.60 மி.மீ.

 குறைந்தபட்ச மழையளவு அடையாறு, இராஜா அண்ணாமலைபுரத்தில் 1.80 மி.மீ. பதிவாகியுள்ளது.

 மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,686 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 137 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. டிராக்டர் மேல் 484 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

 தற்போது பெய்த மழையின் காரணமாக தாழ்வான சில பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் 9, ஹைட்ராலிக் ஏணி 2, மர அறுவை இயந்திரங்கள் 262, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 489 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

 01.10.2024 முதல் 11.12.2024 வரை பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழுந்த 417 மரங்களும் அகற்றப்பட்டன. இன்று (12.12.2024) மழையின் காரணமாக 8 மரங்கள் விழுந்துள்ளது. விழுந்த 8 மரங்களும் அகற்றப்பட்டன.

 பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 361 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.

 பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 101 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.

 தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார்நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

 மழைக்காலத்தினை முன்னிட்டு, 15.10.2024 முதல் 11.12.2024 வரை சென்னையில் மட்டும் இதுவரை 4014 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 2,06,972 நபர்கள் பயனடைந்துள்ளனர். இன்று (12.12.2024) 53 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1834 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 15.10.2024 முதல் 12.12.2024 இதுவரை பொதுமக்களிடமிருந்து மழைத் தொடர்பாக 1913 என்ற உதவி எண்ணிற்கு 63,688 புகார்கள் பெறப்பட்டு, 52,337 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11,351 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதையில் இரயில்வே மேம்பாலப் பணி காரணமாக தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது.

 வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 மழை வெள்ள களப்பணிகளில் ஈடுபட இதுவரை 18,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.

சென்னை குடிநீர் வாரியம்

 299 தூர்வாரும் இயந்திரங்கள். 73 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள். 225 ஜெட்ராடிங் வாகனங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 45 கழிவுநீர் ஊர்திகள் என மொத்தம் 642 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2149 களப்பணியாளர்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை மேற்கொள்ள ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post வடகிழக்குப் பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிட்ட சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI MUNICIPALITY ,Metropolitan Chennai Municipal Areas ,
× RELATED லூப் சாலையை மறு சீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு