×

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி

Kangeyam , stray dogs, goatதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம், குண்டடம், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களில் தெருநாய்கள் கடித்து 400க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த கடந்த 23ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். தொடர்ந்து 45 நாட்களுக்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் தெரு நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூரில் குருமூர்த்தி (47) என்ற விவசாயியின் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெருநாய்கள் துரத்தியுள்ளது. இதில் 10 ஆட்டுக்குட்டிகளை தெருநாய்கள் கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே பலியானது.

மேலும், 3 ஆடுகள் பாதிக்கப்பட்டதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இது போல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெருநாய்களை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் விரைவில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

 

The post காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Tiruppur ,Vellakovil ,Tarapuram ,Kundadam ,Moolanoor ,Tiruppur district ,Dinakaran ,
× RELATED லண்டனும்…அண்ணாமலையும்… சீமான் கருத்து