×

சாத்தனூர் அணையில் 10,000 கனஅடி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 119 அடி கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.45 அடியை எட்டி உள்ளது.

சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிச.1ம் தேதி 5-வது கட்ட எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் தற்போது 6-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post சாத்தனூர் அணையில் 10,000 கனஅடி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Satanur Dam ,Tiruvannamalai ,Bengal Sea ,Tamil Nadu ,Tiruvannamalai district ,Chattanur dam ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான...