- ஒன்றிய தேர்தல் அதிகாரி
- மாமல்லபுரம் கடற்கரை கோயில்
- மாமல்லபுரத்தில்
- கனேஷ் குமார்
- செங்கல்பட்டு
- சப்-கலெக்டர்
- நாராயண சர்மா
- சுற்றுலா அதிகாரி
- சக்திவேல்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு ஒன்றிய தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் நேற்று மாலை வந்தார். அப்போது, கடற்கரை கோயில் நுழைவு வாயில் அருகே செங்கல்பட்டு சப் – கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, ஒன்றிய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கடற்கரை கோயிலை தனது குடும்பத்தினரோடு சுற்றிப் பார்த்தார். அப்போது, ஒவ்வொரு சிற்பங்களையும் தொட்டுப் பார்த்து ரசித்தார்.
இதையடுத்து, சுற்றுலா வழிகாட்டி யுவராஜ் என்பவர், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு சிற்பங்கள் எந்த காலத்தில், எந்த மன்னரால் செதுக்கப்பட்டது. கடற்கரை கோயிலை, கடல் அலைகள் தாக்காதவாறு எப்படி பராமரிக்கப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தகவல்களை தெளிவாக விளக்கி கூறினார். பின்னர், கடற்கரை கோயில் முன்பு நின்று குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, திருப்போரூர் தாசில்தார் ராதா, செங்கல்பட்டு தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, தேர்தல் ஆணையர் வருகையொட்டி சட்டம் ஒழுங்கு எஸ்ஐ திருநாவுக்கரசு, டிராபிக் எஸ்ஐ மோகன் முன்னிலையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்போரூர்: இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு வந்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் செயல் அலுவலர் குமரவேல் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மாவுடன் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கந்தசாமி கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
The post மாமல்லபுரம் கடற்கரை கோயிலை கண்டு ரசித்த ஒன்றிய தேர்தல் அதிகாரி appeared first on Dinakaran.