×

திருத்தணியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருத்தணி: திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் திருத்தணியில் உள்ள அரக்கோணம் சாலையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், மின் நுகர்வோர் கலந்துகொண்டு மின்சார சேவைகள் பெற மனு வழங்கி தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post திருத்தணியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruthani ,Thiruthani Power Board ,Executive Engineer ,Bhaskaran ,Thiruthani Division ,Power Board ,Executive ,Arakkonam Road ,
× RELATED அரக்கோணம் நெடுஞ்சாலையில் நடைமேடையை...