×

புதிய அங்கன்வாடி கட்டிடம்: எம்எல்ஏ அடிக்கல்

பொன்னேரி: பொன்னேரி தொகுதி ஜெகநாதபுரம் ஊராட்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடத்துக்கான பூமி பூஜையை செய்து பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் பணிகளை தொடங்கி வைத்தார். பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம், ஜெகநாதபுரம் ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் அங்குள்ள குழந்தைகள் அருகில் உள்ள பள்ளி வளாகத்தில் பயின்று வந்தனர். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க எம்எல்ஏவுக்கு கோரிக்கை வைத்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் சமூக வளர்ச்சி நிதி ரூ.16 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் எம்எல்ஏ கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் மணிகண்டன், ஊராட்சி செயலர் ஞானமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் சீனிவாசன், முரளி, மதியழகன், திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், கிராம நிர்வாகிகள், மகளிரணி, இளைஞரணி சார்பில் பலர் கலந்து கொண்டனர்.

The post புதிய அங்கன்வாடி கட்டிடம்: எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : New Anganwadi Building ,MLA ,Ponneri ,Durai Chandrasekhar ,Bhumi Pooja ,Anganwadi building ,Jagannathapuram ,Cholavaram ,New Anganwadi ,Dinakaran ,
× RELATED பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில்...