- ஈரோடு மனித உரிமைகள் தினம்
- சத்தியமங்கலம்
- மனித உரிமைகள் தினம்
- புதுவடவல்லி
- வேடர் நகர் அரசு
- உயர்
- பள்ளி
- வில்லு
- தின மலர்
சத்தியமங்கலம், டிச.11: சத்தியமங்கலம் அருகே உள்ள புதுவடவள்ளி வேடர் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மனித உரிமை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், குழந்தை திருமணம் மற்றும் வரதட்சணை கொடுமை பற்றி வில்லு பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து, ஐநா சபை மூலம் உருவாக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிமைகள் கிடைத்திட வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்தியாவில் மக்களின் உரிமைகள் மற்றும் செயல்பாடுகள் சார்ந்த குழந்தைகளின் கற்றல் கற்பித்தலில் மட்டும் இன்றி சமூகத்திலும் உரிமைகளுடன் சிறந்த பண்புகளோடு விளங்குவதற்கு உண்டான குழந்தைகளுக்கு மனித உரிமை தினம் பற்றி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் அஜித் குமார், ரோட்டரி கிளப் நாராயணன் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் சதீஷ் ஆகியோர் விரிவாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
The post ஈரோடு மனித உரிமை தின விழிப்புணர்வு appeared first on Dinakaran.