×

ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, டிச. 11: ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில், அதானி குழும நிறுவனங்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். ஆண்டு கணக்கில் நீடித்து வரும் மணிப்பூர் கலவர சூழல் குறித்தும் விவாதிக்க வேண்டும்.

உணவு தானியங்கள் உட்பட அனைத்து வகை அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த வேண்டும்.  அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க தவறியதற்கு ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மாநில துணை தலைவர் துளசிமணி, மாவட்ட துணை செயலாளர்கள் சின்னசாமி, குணசேகரன், ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist Party ,Union Government ,Erode ,Communist Party of India ,Erode Surambatti 4 Road ,South District Secretary ,Prabhakaran ,Adani Group ,Dinakaran ,
× RELATED மசூதிகளை கணக்கெடுக்க கோரும்...