- கோபி ஃபார்மர்ஸ் கோ
- விற்பனை சங்கம்
- கோபி
- கோபி விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்
- கோபி விவசாயிகள் கூட்டுறவு விற்பனை சங்கம்
- கதகளி
- கோபி விவசாயிகள் கூட்டுறவு விற்பனை சங்கம்
- தின மலர்
கோபி, டிச.10: கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாழை தார் ஒன்று இரு வாரங்களாக ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில், கதளி ரகம் கிலோ ஒன்று 18 ரூபாய் முதல் 32 ரூபாய் வரையிலும், நேந்திரன் ரக வாழை கிலோ ஒன்று 24 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையிலும் விலை போனது.
அதே போன்று பூவன் ரகம் தார் ஒன்று 170 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும், தேன் வாழை 140 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், ரஸ்தாளி 170 ரூபாய் முதல் 850 ரூபாய் வரையிலும், பச்சைநாடன் 140 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும், ரொபஸ்டோ 120 ரூபாய் முதல் 310 ரூபாய் வரையிலும், மொந்தன் 110 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விலை போனது.
அதே நேரத்தில் செவ்வாழை கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் தார் ஒன்று 240 ரூபாய் முதல் 1,010 ரூபாய் வரை விலை போனது. மொத்தம் 8 ஆயிரத்து 660 வாழைத்தார்கள் வரத்து இருந்த நிலையில், 10 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. தொடர்ந்து செவ்வாழை விலை உயர்ந்தே இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே போன்று இங்கு நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காய் குறைந்தபட்சம் 11 ரூபாய் முதல் 36 ரூபாய் வரை விலை போனது. மொத்தம் 16 ஆயிரத்து 760 தேங்காய் வரத்து இருந்த நிலையில் 3 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.
The post அறுவடைக்கு தயாரான மஞ்சள் கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.1000க்கு மேல் செவ்வாழை தார் விற்பனை appeared first on Dinakaran.