ஈரோடு, டிச. 10: திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்புக்கு ஈரோட்டில் இருந்து 450 போலீசார், 12 தீயணைப்பு வீரர்கள் இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளனர். திருவண்ணாமலையில் தீப திருவிழா வரும் 13ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த, விழாவில் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை பாதுகாப்பு பணிக்கு இன்று (10ம் தேதி) ஈரோடு எஸ்பி. ஜவகர் தலைமையில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர், போக்குவரத்து போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் என 450 பேர் செல்ல உள்ளனர். இவர்கள், 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதேபோல் 12 தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனத்துடன் திருவண்ணாமலை பாதுகாப்புக்கு செல்கின்றனர்.
The post கார்த்திகை தீப பாதுகாப்பு பணிக்கு ஈரோட்டிலிருந்து 450 போலீசார், 12 தீயணைப்பு வீரர்கள் appeared first on Dinakaran.