×

ஆரணியாற்றில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்கவேண்டும்: 10 கிராம மக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் – காரணி இடையே ₹20 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக 10 கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வரவும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் வேலைக்கு செல்லவும் பாலம் அருகே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த மாத இறுதியில் பெஞ்சல் புயல் காரணமாக மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆந்திராவிலும் பரவலாக கனமழை பெய்ததன் காரணமாக பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு புதுப்பாளையம் – காரணி கிராமங்களுக்கு செல்லும் தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டுவிட்டது.

மேலும் ஆற்றில் சுமார் 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் செல்லும் நிலையில் காவல் துறையினர் இந்த தரைப்பாலத்தில் யாரும் செல்லாதபடி தரைப்பாலத்திற்கு முன் முள் வேலிகளை அமைத்து தடுப்பு ஏற்படுத்தினர். போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் காரணி, புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக வாகனங்களில் 10 கிமீ சுற்றி செல்கின்றனர். ‘’தண்ணீர் வடிந்தவுடன் உடனடியாக உடைந்த தற்காலிக தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்’’ என 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆரணியாற்றில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்கவேண்டும்: 10 கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Araniyar ,Uthukkottai ,Pudupalayam ,Vakar ,Periyapalayam ,
× RELATED பெரியபாளையம் அருகே சேதமடைந்த...